போக்சோவில் வாலிபர் கைது

அருப்புக்கோட்டையில் போக்சோவில் வாலிபரை போலீசார் ைகது செய்தனர்.

Update: 2022-06-18 18:54 GMT

அருப்புக்கோட்ைட

அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த தலைமலை (வயது 27) என்பவரும், 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென அந்த சிறுமி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதைக் கண்ட உறவினர்கள் சிறுமியை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.இந்நிலையில் சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்