குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்
மதுரை புதூர் சம்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் பாண்டியராஜன் என்ற அருண் (வயது 22). நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் இவர் மீது சங்கிலி பறிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர்.