பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது

ராமநாதபுரத்தில் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-22 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கேம்ப் மரைக்காயர்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் மாரீஸ்வரன் (வயது 34). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்து காட்டூரணி பகுதியில் தனது நண்பரை பார்க்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென்று வழிமறித்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுத்து கொடுக்கும்படி கூறினாராம்.

அவர் மறுக்கவே பணம் கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்துவிடுவதாக கூறி குத்த வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரீஸ்வரன் கத்தி கூச்சலிடவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்துள்ளனர்.

கத்தியை காட்டி மிரட்டியதை கண்டு அவரை விலக்கி விட்டுள்ளனர். இதுகுறித்து மாரீஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வேல்நகர் மலைக்கோட்டை மகன் சிவக்குமார் (25) என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்