பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது
பண்ருட்டி அருகே இருசக்கர வாகனங்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், மொபட்டை நிறுத்திவிட்டு மாணிக்கத்துக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்கள் மூலம் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பண்ருட்டி அடுத்த எஸ்.கே.பாளையத்தை சேர்ந்த சுப்பையா மகன் சுந்தரவேல்(வயது 21) என்பதும், சேந்தநாடு பகுதியில் இருந்து மொபட்டை திருடிக்கொண்டு வரும் வழியில் ரெட்டிபாளையம் மாணிக்கம் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து மாணிக்கம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுந்தரவேலுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.