செல்போன் டவரில் கேபிள் வயர் திருடிய வாலிபர் கைது

செல்போன் டவரில் கேபிள் வயர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-01-21 17:12 GMT

செல்போன் டவரில் கேபிள் வயர் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கூட்ரோடு அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வாலாஜா தாலுகா திருமலைச்சேரி பகுதியை சேர்ந்த ரிஷிபாபு (வயது 22) என்பதும், திமிரியை அடுத்த காவனூர் பகுதியில் உள்ள செல்போன் டவரில் கேபிள் வயர் திருடியதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ரிஷிபாபுவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்