அஞ்சுகிராமம் அருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

அஞ்சுகிராமம் அருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-12 20:22 GMT

அஞ்சுகிராமம், 

அஞ்சுகிராமம் அருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 25), தொழிலாளி. இவருடைய தங்கை வீடு அஞ்சுகிராமம் அருகே பால்குளம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ளது.

முத்துகிருஷ்ணன் மனைவியுடன் இரு தினங்களுக்கு முன் தங்கை வீட்டுக்கு வந்தார். அப்போது தங்கையின் கணவர் சக்திவேலுடன் (28) வெளியே சென்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது அவர்கள் இடையே வாய்த் தகராறு நடந்ததாகவும் தெரிகிறது. அப்போது சக்திவேல் வீட்டை விட்டு வெளியே போ என முத்துகிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இது என்னுடைய தங்கை வீடு நான் வெளியே போக முடியாது என முத்துகிருஷ்ணன் கூறியதால் ஆத்திரமடைந்த சக்திவேல் முத்து கிருஷ்ணனை தாக்கி், கத்தியால் இடுப்பு, தலை, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் முத்துகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸி மேனகா வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்