சாராயம் விற்ற வாலிபர் கைது

பந்தநல்லூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்;

Update: 2022-06-01 21:15 GMT

திருப்பனந்தாள்

பந்தநல்லூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனை, மணல் திருட்டு, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பதை தடுக்கும் பொருட்டு போலீஸ் அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், குற்றச்சம்பவங்களை தடுக்கும்பொருட்டு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பந்தநல்லூர் அருகே புழுதிகுடி கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சாராயம் விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜை(வயது 29) இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சரண்ராஜின் தாய் விஜயாவை போலீசார் தேடி வருகின்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்