போடி தாலுகா போலீசார் இன்று காலை ரோந்து சென்றனர். அப்போது போடி அடுத்த மீனா விலக்கு பஸ் நிறுத்தம் அருகே அணைக்கரைப்பட்டியை சேர்ந்த அஜீத்பாண்டியன் (22) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.55 ஆயிரம் ஆகும்.