புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது
புகையிலை பொருட்கள் வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் போலீசார் வீரவநல்லூர்- அரிகேசவநல்லூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த ஆலங்குளம் நெட்டூர் சாலை தெருவை சேர்ந்த அப்புராஜ் (வயது 35) என்பவரை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்புராஜை கைது செய்து, 7 கிலோ 650 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.