போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாலிபர் கைது
போக்குவரத்திற்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை போலீசார் சுங்ககேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுங்ககேட் அருகே முசிறி பஸ் நிறுத்தம் பகுதியில் குளித்தலை தேவதானம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த சுகதேவ் (வயது 27) என்பவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்து தகாத வார்த்தைகளை கூறி திட்டி கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்த போலீசார் அந்த சுகதேவ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.