நாட்டுத் துப்பாக்கி, மான் கொம்புகள் பதுக்கிய வாலிபர் கைது

திருப்பத்தூர் அருகே நாட்டுத் துப்பாக்கி, மான் கொம்புகள் பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-12 17:27 GMT

திருப்பத்தூர் அருகே உள்ள இருனாபட்டு கிராமத்தில் ஒருவர் உரிய அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி, மான் கொம்புகள் வைத்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவின் பேரில், வனச்சரக அலுவலர் பிரபு மற்றும் வனக் குழுவினர் நேற்று அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அதேப் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 31) என்பவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு துப்பாக்கிகள், இரண்டு புள்ளி மான்களின் கொம்புகள், வெட்டுக்கத்தி, வன பறவைகளைப் பிடிக்கும் கண்ணி வலைகள் மற்றும் துப்பாக்கியில் பயன்படுத்தும் வெடி மருந்துகள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்து. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்