ஒயின் குடித்தால் கலராக மாறலாம்: பள்ளி மாணவிகளை வற்புறுத்தி மது அருந்த வைத்த இளைஞர் கைது...!

ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என யாரோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2022-08-12 09:26 IST

கரூர்,

கரூர் சர்ச் கார்னர் பகுதியில் பள்ளி மாணவிகள் 3 பேர் அரை மயக்க நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ், அங்கு தள்ளாடிக் கொண்டிருந்த 2 மாணவிகளை ஏற்றிக்கொண்டு கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றது. ஒரு மாணவி சர்ச் கார்னர் பகுதியில் இருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 2 மாணவிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் மொத்தம் 3 மாணவிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மற்றொரு மாணவியையும் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அறிவுரை விசாரணையில் 3 மாணவிகளும் கரூரில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வில் தோல்வியடைந்ததால், மறுதேர்வு எழுத பள்ளி சீருடையுடன், மற்றொரு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு செல்லும்போது 3 பேரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அப்போது ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என யாரோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒயினில் போதை வரும் என்று தெரியாமல் குடித்து விட்டு அவர்கள் தள்ளாடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தநிலையில், பள்ளி சீருடையில் மாணவிகள் மது போதையில் தள்ளாடிய விவகாரத்தில் மாணவிகளை வற்புறுத்தி மது அருந்தவைத்த தீனா என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.ஒயின் குடித்தால் கலராக மாறலாம் என யாரோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் மூலம் ஒயினை வாங்கி 3 மாணவிகளும் குடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்