பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
குளித்தலை போலீசார் சுங்ககேட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூர் பஸ் நிறுத்தம் அருகே வேங்காம்பட்டி குடித்தெருவை சேர்ந்த விஜயகுமார் (வயது 23) என்பவர் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டு இருந்துள்ளார். அவரை போலீசார் எச்சரித்தும் அவர் கேட்காத காரணத்தால் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.