வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
வாணியம்பாடி பஷிராபாத் பகுதியில் நேற்று முன்தினம் குடிபோதையில் ஆசிம் (வயது 28) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிமை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.