விவசாயியை மண்வெட்டியால் தாக்கிய வாலிபர் கைது

விவசாயியை மண்வெட்டியால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-16 20:43 GMT

துவரங்குறிச்சி அருகே உள்ள அடைக்கம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஜோதிமணி(வயது 53). விவசாயியான இவருக்கு வெங்கட்நாயக்கன்பட்டி கிராமத்தில் நிலம் உள்ளதாகவும், அந்த நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளரான மணிகண்டன்(30) என்பவருக்கும், ஜோதிமணிக்கும் கடந்த ஒரு வருடமாக இடப்பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியநிலையில், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது கையில் வைத்திருந்த மண்வெட்டியால் ஜோதிமணியின் முன்பக்க தலையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஜோதிமணியை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கம்பட்டியை சேர்ந்த மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்