பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
சோளிங்கர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சோளிங்கரை அடுத்த ஐய்பேடு காலனியை சேர்ந்த சரவணன் மனைவி மேனகா (வயது 49). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவருக்கும் வீட்டில் பாகம் இருந்துள்ளது. கோவிந்தம்மாள் தனது பாகத்தை அதே கிராமத்தை சேர்ந்த தாஸ் என்பவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் தாஸ், பாக்யராஜ், புஷ்பராஜ், சாந்தி ஆகியோர் மேனகாவை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த மேனகா சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து பாக்யராஜ் (32) என்பவரை கைது செய்தனர். மேலும் புஷ்பராஜ், சாந்தி, தாஸ் ஆகியோரை தேடி வருகின்றனர்.