ரேஷன் கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
ரேஷன் கடை ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் அருகே உள்ள உல்லியக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 37). இவர் நாச்சியார்பேட்டை கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று ரேஷன் கடையில் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த முகாம் நடைபெறும் நாள் குறித்து பதாகை வைக்கப்பட்டுருந்தது. அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் நீலமேகம் மகன் அலெக்ஸ் பாண்டியன் (26), அந்த பதாகையை கிழித்து, தகாத வார்த்தைகளால் முத்துச்செல்வனை திட்டி, கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துச்செல்வன் அளித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தார்.