காதல் மனைவியை தாக்கிய வாலிபர் கைது

நிலக்கோட்டை அருகே காதல் மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-25 19:45 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டையை சேர்ந்தவர் தினேஷ்பாண்டி (வயது 30). இவரும், அப்பகுதியை சேர்ந்த ஜக்கம்மாள் (21) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தினேஷ்பாண்டி சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததுடன், அடிக்கடி ஜக்கம்மாளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்று முன்தினம் தினேஷ்பாண்டி மீண்டும் தகராறு செய்தார். இதனை ஜக்கம்மாள் கண்டித்தார். இதில், ஆத்திரமடைந்த தினேஷ்பாண்டி, மனைவி என்றும் பாராமல் ஜக்கம்மாளை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில், காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஜக்கம்மாள், நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்பாண்டியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்