கட்டிட உதவி ஒப்பந்ததாரரை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

விழுப்புரத்தில் கட்டிட உதவி ஒப்பந்ததாரரை தாக்கிய வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

Update: 2022-12-03 18:45 GMT

விழுப்புரம்;

சென்னை கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகன் ராஜ்குமார் (வயது 25). இவர் விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலை பணியை மேற்கொள்ளும் அலுவலராக பணியாற்றி வருகிறார். அப்பணியில் உதவி ஒப்பந்ததாரராக உத்தரபிரதேச மாநிலம் சஜிர்பிளைபல் பகுதியை சேர்ந்த ராம்கிரிபால் வர்மா (22) என்பவர் உள்ளார். இவர் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே உள்ள ஒரு கூடாரத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த கூடாரம் அருகே நின்றுகொண்டிருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரை பார்த்து ஏன் இங்கு நிற்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், ராம்கிரிபால்வர்மாவிடம் வீண் பிரச்சினை செய்து அவரை திட்டி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இதில் காயமடைந்த ராம்கிரிபால்வர்மா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராஜ்குமார், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்