ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது

அய்யலூரில், ஆட்டோ டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-28 11:59 GMT

அய்யலூர் அண்ணாநகரை சேர்ந்தவர் லிவர்பாண்டி என்ற பாண்டியராஜ் (வயது 31). நேற்று முன்தினம் இவர், அய்யலூரில் உள்ள ஒரு பேக்கரி கடை முன்பு ரகளையில் ஈடுபட்டார். அதனை அய்யலூரை சேர்ந்த முகமதுரபீக் என்பவர் செல்போனில் வீடியோ எடுத்தார். இதனை லிவர்பாண்டி பார்த்தவுடன், முகமது ரபீக் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் முகமதுரபீக்கின் உறவினரான ஆட்டோ டிரைவர் சலீம்சேட் (43) என்பவர் நேற்று அய்யலூரில் உள்ள ஒரு ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த லிவர்பாண்டி, சலீம்சேட்டிடம் தகராறு செய்து இரும்பு கம்பியால் அவரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சலீம்சேட் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சலீம்சேட் புகார் கொடுத்தார். அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து லிவர்பாண்டியை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்