திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-22 20:07 GMT

கும்பகோணம்

கும்பகோணம் அருகே துக்காச்சி பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் தினேஷ்(வயது25). இவர் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தினேசிடம் கேட்டார். அப்போது தினேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்