தமிழகத்தை முதன்மையாக கொண்டு வர இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் துணையாக இருக்க வேண்டும்

தமிழகத்தை முதன்மையாக கொண்டு வர இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் துணையாக இருக்க வேண்டும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு.

Update: 2023-06-01 18:57 GMT

சென்னை,

மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் கிண்டி சிட்கோ தலைமையகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தின் கீழ், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, அதற்கான திட்ட மதிப்பின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், அரசின் மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோராக உருவாக வேண்டும்.

தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றும் இந்த அரசுக்கு இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் துணை புரிந்து, தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சோவ், இன்ட்கோசர்வ் முதன்மை செயல் அலுவலர் மோனிகா ராணா, தொழில் வணிக கூடுதல் இயக்குனர் ஏகாம்பரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்