கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற வாலிபர் கைது

கொடைக்கானலில் கஞ்சா, போதை காளான் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-10 19:14 GMT

கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டீன் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மஞ்சப்பையுடன் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர் மன்னவனூரை சேர்ந்த கருப்பையா (வயது 38) என்பதும், கஞ்சா மற்றும் போதை காளான் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து கருப்பையாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்