செஞ்சி
செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகள் லட்சுமி(வயது 26). இவர், அவரது கணவர் ஆறுமுகத்துடன் சென்னையில் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் ஊருக்கு வந்த லட்சுமி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். இதில் மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆறுமுகம் சிகிச்சைக்காக பெண்ணாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே லட்சுமி பரிதாபமாக இறந்தார். தீராத வயிற்று வலியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.