கூலித் தொழிலாளி மனைவி தற்கொலை

போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.;

Update: 2023-09-07 05:16 GMT

அசாம் மாநிலம் நாதன் மாவட்டம் சோனா பாலி பகுதியை சேர்ந்தவர் முக்தார் உசேன். இவரது மனைவி ஜூகிர் பேகம் (வயது19). இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அஸ்ஸாமில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கணவன்- மனைவி இரண்டு பேரும் உறவினர்களுடன் மேட்டுப்பாளையம் வந்து குரும்பனூர் பகுதியில் உள்ள குமரேசன் என்பவர் தோட்டத்தில் தங்கி பாக்கு உரிக்கும் தோட்ட கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூகிர்பேகம் தனது தாயார் சகாரா என்பவரிடம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். பின்னர் அனைவரும் தூங்கியவுடன் ஜூகிர்பேகம் வீட்டுக்குள் சென்று விட்டத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமணம் ஆகி நான்கு மாதத்தில் இறந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்