இளம் செஞ்சிலுவை சங்க சிறப்பு கூட்டம்
கோதண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்க சிறப்பு கூட்டம் நடந்தது;
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோதண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்க வாராந்திர சிறப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருள் அரசன் தலைமை தாங்கினார்.உதவி தலைமைஆசிரியர் சேகர், சிறப்பு ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வளர்மதி வரவேற்றார். இதில் இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய மேரி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பல்வேறு விபத்துகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதலுதவி அளிப்பது, பாதுகாப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், இளம் செஞ்சிலுவை மாணவர்கள், ஆசிரியர்கள் சரளா, வேம்பு மற்றும் ஓவிய ஆசிரியர் நாராயணன், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் இளம் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர் ரவி நன்றி கூறினார்.