ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தங்க சங்கிலி பறிப்பு

பெண் பயணி அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.;

Update:2025-03-02 17:41 IST

நாமக்கல்,

சென்னையில் இருந்து கோவை நோக்கி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரெயில், நாமக்கல் மாவட்டம் காவேரி ரெயில்நிலையம் அருகே ரெயில் மெதுவாக வந்துகொண்டிருந்தது. அப்போது ரெயிலின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த  பெண் பயணி அணிந்திருந்த 8 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த ரெயில்வே போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், உள்ளூரை சேர்ந்தவர் இந்த திருட்டில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்