இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

கிணத்துக்கடவு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.;

Update: 2023-07-03 23:15 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வயிறு வலி

கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட வீரப்ப கவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகராசு (வயது 32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அஸ்மிதா (19). இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 24.5.2023-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி அஸ்மிதா வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதை பார்த்த முருகராசு, தனது மனைவியை மீட்டு கிணத்துக்கடவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், கடந்த 21-ந் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே நேற்று சிகிச்சை பலனின்றி அஸ்மிதா இறந்தார். இதுதொடர்பாக அஸ்மிதா தாயான சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த சங்குமுது (42) கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி சில வாரங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் குறித்து பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் சங்குமுது, முருகராசு ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்