தாழ்வு மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது
தாழ்வு மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று பொள்ளாச்சியில் நடந்த நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளு க்கு சப்-கலெக்டர் பிரியங்கா அறிவுரை வழங்கினார்.;
பொள்ளாச்சி
தாழ்வு மனப்பான்மை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்று பொள்ளாச்சியில் நடந்த நான் முதல்வன் திட்ட நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளு க்கு சப்-கலெக்டர் பிரியங்கா அறிவுரை வழங்கினார்.
நான் முதல்வன் திட்டம்
பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பது, வேலைவாய்ப்பு வசதிகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. உதவி செய்வதற்கு பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
நன்றாக படித்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தாழ்வு மனப் பான்மை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. அதை விட்டு வெளியே வந்து விட வேண்டும். படிக்க விருப்பம் இருந்தால் நன்றாக படிக்க வேண்டும். இல்லையெனில் சுய தொழில் செய்து வாழ்க்கையில் வெற்றி பெறலாம். பொள்ளாச்சி அரசு கல்லூரியில் சேரு வதற்கு இடம் கிடைக்காத வர்கள், வால்பாறை அரசு கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாய்ப்பை பயன்படுத்துங்கள்
முன்னதாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி பேசும்போது கூறுகையில், தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ-மாணவிகளுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்து உள்ளது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிரச்சினைகளை கல்வி இருந்தால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். முயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றார்.
விழாவில் பொள்ளாச்சி தாசில்தார் ஜெயசித்ரா, தனி தாசில்தார் வெங்கடாச்சலம், பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் முருகேசன் மற்றும் வங்கி அதிகாரிகள், வேலைவாய்ப்பு அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.