யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்: கவர்னர் ஆர்.என். ரவி
10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது
கோவை,
யோகாவை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி 10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்தியாவில் யோகா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் இன்று யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி யோகாசனம் செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி ,
யோகா ஆரோக்கியமான நாட்டிற்கு வழிவகுக்கும்; 10 ஆண்டுகளுக்கு முன் யோகாவை உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பிரதமர் மோடி கிடைக்கச் செய்தார். உலக நாடுகள் யோகாவை ஏற்றுக் கொண்டது; யோகாவைக் கற்றுக் கொள்ளுங்கள் . என தெரிவித்தார்.