சர்வதேச யோகா தினம்
போச்சம்பள்ளி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.;
மத்தூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நீதிமன்ற நடுவர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். வாழும் கலை அமைப்பின் பிரதிநிதிகள் சிவா, செல்வராஜ், வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு நீதிபதிகள், ஊழியர்கள், வக்கீல்களுக்கு யோகாசனம் செய்வது குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் யோகாசனத்தின் அவசியம் குறித்தும், நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினர். இதில் வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் ஜெயபாலன், வக்கீல்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.