யோகா விழிப்புணர்வு
அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளியில் யோகா விழிப்புணர்வு;
திருக்கோவிலூர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் வாசவி சங்கம், வனிதா சங்கம், மனவளக்கலை மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி செயலாளர் ராஜாசுப்ரமணியம், முதல்வர் பரணிராஜாசுப்பிரமணியம் ஆகியோர் செய்து இருந்தனர்.