114 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு
மாவட்டத்தில் 114 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 27 மையங்களில் 114 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. மொத்தம் 11,271 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 8,617 பேர் தேர்வு எழுதினர். 2,654 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பு ஏற்பாடுகளையும், தேர்வர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்திருந்தது.