தொண்டி,
தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் லேசான காயங்களுடன் மயங்கிய நிலையில் கடல் பன்றி ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடல் பன்றியை பார்வையிட்டனர். இதையடுத்து கடல் பன்றியை மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர்.
மீனவர்களின் வலையில் சிக்கிய கடல் பன்றி அதில் இருந்து தப்பி லேசான காயத்துடன் கரை ஒதுங்கியது தெரியவந்தது.