விநாயகர் சிலை வைத்து வழிபாடு

விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடந்தது.;

Update: 2022-08-30 18:55 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தில் வெற்றி விநாயகர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் 32-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து மண்டல பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) வெங்கலத்தில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிருஷ்ணாபுரம் கல்லாற்றில் கரைக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்