அமராவதி ஆற்றில் வழிபாடு

அமராவதி ஆற்றில் வழிபாடு செய்யப்பட்டது.;

Update: 2022-09-09 18:28 GMT

கரூர் நதிநீரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஆறுகளில் நீர் ஓட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து ஆற்று நீரினை வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து முன்னதாக ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து ஆற்று நீரினை தொட்டு வணங்கி ஆற்றுக்கு ஆராத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பவுர்ணமியையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்