அரூர் வாணீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

Update: 2023-07-15 19:30 GMT

அரூர்:

அரூர் கடைவீதியில் உள்ள ஸ்ரீவாணீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், பழங்கள், பூக்கள் ஆகியவை மூலம் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. ெதாடா்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்