அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும் - கவர்னர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-01 07:04 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி தக்ஷின மந்த்ராலயாவில் நஞ்சன் குட் ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம் உள்ளது. இதன் பொன் விழா கொண்டாட்டம் தக்ஷின மந்த்ராலயாவில் கடந்த 28-ந் தேதி தொடங்கியது.

இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், "பாரதத்தையும், சனாதனத்தையும் பிரிக்க முடியாது. சனாதனத்தில் பிரிவுகள் உள்ளது, வேறுபாடுகள் இல்லை. சனாதன தர்மம் உருவாக காரணமாக இருந்தது தமிழ்நாடு. தமிழ்நாடு புனிதமான நிலம். வளமான நாடு. பல ஆண்டுகளாக புனிதர்களும், மகான்களும் வாழ்ந்த நாடு.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் துவங்க தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. சனாதனத்தில் தீண்டாமை வலியுறத்தப்படுவதில்லை. இந்தியாவுக்கு என்று ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை. 10 ஆயிரம் ஆண்டுகளாக இது உள்ளது. சனாதனம், சமஸ்கிருதியை உருவாக்கி பல இடங்களுக்கு பரவ செய்துள்ளது இந்தியாவை பாரத் என்கிறது. சனாதன தர்மம் மக்களை பிரிக்கிறது என்றால் அது தவறு. சனாதன தர்மத்தை பிடித்து காக்கின்ற நிலம் இது. சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை. அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும்" என்று அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்