உலக மண்வள தின விழா

உலக மண்வள தின விழா நடைபெற்றது.;

Update:2022-12-07 00:15 IST

கோத்தகிரி, 

கோத்தகிரி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில், நீடித்த நிலையான வேளாண்மை திட்டத்தின் கீழ் உலக மண்வள தின விழா ஜக்கனாரை, கேசலாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் தலைமை தாங்கினார். ஊட்டி மண் ஆய்வு கூட தொழில்நுட்ப அலுவலர் லங்கேஷ், மண் மாதிரி சேமிப்பு குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை உதவி அலுவலர் ஜோதி குமார், மண் மாதிரி சேமிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். கோத்தகிரி வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் மண் வள மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரசாந்த் பிரதம மந்திரி கிசான் சமான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு நில ஆவணங்கள் புதுப்பித்தல் மற்றும் இ.கே.ஒய்.சி நடைமுறைகள் குறித்து பேசினார். வேளாண் வணிகத்துறை வேளாண்மை உதவி அலுவலர் வெற்றிவேல் குமார், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கேசலாடா கிராமத்தை சேர்ந்த 30 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டன. முடிவில் ஊர் தலைவர் துரை நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்