கழுகுமலையில் உலக அமைதி தின ஊர்வலம்

கழுகுமலையில் உலக அமைதி தின ஊர்வலம் நடந்தது.;

Update:2023-09-27 00:15 IST

கழுகுமலை:

கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் குருவிகுளம் வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் வளனார் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் உலக அமைதி தின ஊர்வலம் நடந்தது.

வளனார் கல்லூரி முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் அருட்தந்தை ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். கழுகுமலை ஆர்.சி.சூசை மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெஞ்சமின் ஆசியுரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கழுகுமலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருசாமி கலந்து கொண்டு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கழுகுமலை ஆறுமுகம் நகர் விமல் மெட்ரிகுலேஷன் பள்ளி பகுதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் போலீஸ் நிலைய சாலை, மேல பஜார், சங்கரன்கோவில் சாலை வழியாக சென்றது. ஊர்வல்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷமிட்டு சென்றனர். ஊர்வலம் சங்கரன்கோவில் சாலையில் நிறைவடைந்தது. இதில் வளனார் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பாலமுருகன், கழுகுமலை விமல் மெட்ரிகுலேஷன் பள்ளிஆசிரியர் கன்னிச்சாமி, கல்லூரி பேராசிரியர்கள் அய்யனகுமார், மணிகண்டன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்