ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளியில் உலக ஓசோன் தினவிழா

ஆறுமுகநேரி அரசு மகளிர் பள்ளியில் உலக ஓசோன் தினவிழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-09-16 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி ஓசோன் தினம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கி பேசினார். மாணவி செல்வி ஜெயராணி ஓசோனின் நன்மைகள் பற்றி பேசினார். பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, மற்றும் வினாடி-வினா போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை பரிசு வழங்கினார். தொடர்ந்து மாணவிகள் பள்ளி வளாகத்தைச் சுற்றி ஓசோன் உலக தினம் தொடர்பான பதாகைகளை ஏந்தி பேரணி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்