உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி
உலக ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
பனைக்குளம்
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையும், நாட்டு நலப்பணி திட்டமும் இணைந்து உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை ராமநாதபுரத்தில் நடத்தினர். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா ஆகியோர் மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து 150 மாணவிகள் கைகளில் பதாகைகளை ஏந்தியும், புவி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தை பாதுகாத்தல் குறித்து கோஷங்களை எழுப்பியும் ஊர்வலமாக சென்றனர். பேரணி அரண்மனையில் தொடங்கி கேணிக்கரை மஹா நோன்பு திடலில் முடிவடைந்தது. முன்னதாக வேதியியல் துறை தலைவர் தமிமா வரவேற்றார். நிகழ்ச்சியில் வேதியியல் துறை பேராசிரியர்கள் செல்வகுமார், அய்யனார், சிவசந்துரு, இயற்பியல் துறை பிரபாவதி, பயோடெக் துறை தலைவர் சுதர்சன், விலங்கியல் துறை பேராசிரியர் அன்னிபென்சியா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர். நாட்டு நலப்பணி திட்ட தலைவர் வள்ளி விநாயகம் நன்றி கூறினார்.