உலக ஓசோன் தினவிழா

நாகை நகராட்சி பள்ளியில் உலக ஓசோன் தினவிழா நடைபெற்றது

Update: 2022-09-21 18:45 GMT

வெளிப்பாளையம்:

நாகை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தின விழா மற்றும் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. நாகை ரோட்டரி சங்கம், காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தேசிய பசுமை படை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு நாகை ரோட்டரி சங்கத்தின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். விழாவில், ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார். தேசிய பசுமை படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மாணவர்களுக்கு மஞ்சள் துணிப்பை வழங்கி உலக ஓசோன் தினம் குறித்து பேசினார். விழாவில் ரோட்டரி மண்டலத்தின் உதவி ஆளுனர் சந்திரசேகரன், பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமாறன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமி குணா, ஜுலைகாபீவி அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்