உலக செவிலியர் தின விழிப்புணர்வு பேரணி
பாளையங்கோட்டையில் உலக செவிலியர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.;
கை விளக்கேந்திய காரிகை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாள் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி உள்வளாகத்தில் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி தொடங்கி வைத்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இந்த பேரணியில் மேட்ரன் வள்ளி, தமிழ்நாடு அரசு செவியிலர்கள் சங்க மாநில தணை தலைவர் மணிகண்டன், செவிலியர் பயிற்றுநர் செல்வன் உள்பட செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்நி சென்றனர்.