உலக புகையிலை எதிர்ப்பு தினம்: விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த கலெக்டர்

உலக புகையிலை எதிர்ப்பு தினம் முன்னிட்டு பொதுமக்களுக்கு புகையிலைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Update: 2022-05-31 09:54 GMT

காஞ்சிபுரம்:

நிகோடின் என்ற மிகக்கொடிய வேதிப்பொருளை கொண்ட புகையிலை நிகோடினா டொபாகம் எனும் செடியில் இருந்து கிடைக்க கூடியது. இந்தியாவில் குஜராத், பிகார், மேற்கு வங்கம் முதலியா மாநிலங்களில் புகையிலை அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் உள்ள தட்பவெட்பநிலை, மண்வளம் புகையிலை வளர ஏதுவாக உள்ளன.

அதில் உள்ள 28 வகையான வேதிபொருட்கள் புற்றுநோய் உண்டாக்க காரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள நிகோடின் எனும் வேதிபொருள் நரம்பு மண்டலத்தில் உள்ள அஸீட்டில்கோலின் எனும் வேதிப்பொருளுக்கு மாற்றாக சேர்ந்து மனித உடலை அதற்கு அடிமையாக்கிவிடுகிறது. மேலும் மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிக்க செய்து மரணத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டும் புகையிலையால் ஆண்டு தோறும் 10 லட்சம் மக்கள் இறப்பதாக ஆய்வு சொல்கிறது.

இதனால் புகையிலையை ஒழிக்க வேண்டும் என்ற குறிக்கோளை முன்னிறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மே 31-ம் தேதி புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு புகையிலைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஆல்பா அலைடு ஹெல்த் சயின்ஸ் மற்றும் காந்தி சமுதாய கல்லூரி செவிலியர் மாணவிகள் புகையிலை எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியில் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த ஸ்லோகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் புகைப்படங்களை செவிலியர் கல்லூரி மாணவிகளைக் ஏந்திக்கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி வரை புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்