உலக தாய்மொழி தின விழா

நெல்லையில் உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-02-23 20:08 GMT

பாரதியார் உலக பொதுச்சேவை நிதியம், லிட்டில் பிளவர் கல்வி குழுமம் ஆகியவை இணைந்து உலக தாய்மொழி தின விழா நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. பாரதியார் உலக பொது சேவை நிதிய தலைவர் மரியசூசை தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் முத்துசாமி வரவேற்றார். பொது நிதியாளர் பாப்பாக்குடி செல்வமணி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் கணபதி சுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார்.

நெல்லை ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையரும், தனி மாவட்ட வருவாய் அலுவலருமான சுகன்யா ராஜ்குமார் கலந்து கொண்டு விருது வழங்கி பேசினார். எழுத்தாளர் செ.திவான், மாநில தமிழ் சங்க பொருளாளர் பாப்பையா, நிலா இலக்கிய வட்ட பொறுப்பாளர் ராஜகோபால், கம்பன் கழக செயலாளர் பொன் வேலுமயில், ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி முதல்வர் மைதிலி, பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் நாதன், கண்ணதாசன், இலக்கிய பேரவை தலைவர் திருக்குறள் முருகன் ஆகியோருக்கு செந்தமிழ் வளர் செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்