உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம்

உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் நடந்தது

Update: 2022-06-09 19:10 GMT

மதுரை,

தென்னக ரெயில்வேயின், மதுரை கோட்டம் சார்பில் உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ரெயில் பாதையும், சாலையும் சந்திக்கும் இடம் லெவல் கிராசிங் என அழைக்கப்படுகிறது. உலக லெவல் கிராசிங் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 9-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதற்கிடையே, மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு பிரிவு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. உலக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நடமாடும் பிரசார வாகனத்தை கோட்ட மேலாளர் அனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மதுரையில் இருந்து திருச்சி வரை உள்ள லெவல் கிராசிங்குகள், ரெயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள், பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பிரிவு பணியாளர்களின் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. மதுரையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, கோட்ட முதுநிலை பாதுகாப்பு அலுவலர் முகைதீன் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்