திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா
திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது.;
திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பிளாஸ்டிக்கினால் ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வால், கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் மற்றும் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், கலந்து கொண்டனர். தொடர்ந்து ரெயில் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ரெயில் நிலைய 1-வது நடைமேடையில் சாரண, சாரணியர் இயக்கத்தினரின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து, ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் மணீஷ்அகர்வால் இலவச மரக்கன்றுகளை வழங்கினார். இதேபோல் திருச்சி கோட்டை ரெயில் நிலையம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, அரியலூர், விருத்தாசலம், உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களிலும் உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது.ரெயில்வே என்ஜினீயரிங் பிரிவு சார்பில் குட்ஷெட் யார்டில் 300 மரக்கன்றுகளும், ரெயில்வே பயிற்சி மைய வளாகத்தில் 80 மரக்கன்றுகளும் நடப்பட்டன.