உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்
கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.;
உலக சுற்றுச்சூழல் தினம் வருகிற 5-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்ட வன அலுவலர் (கூடுதல் பொறுப்பு) இளையராஜா உத்தரவுப்படி நேற்று கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிவராம் கலைக்கூடம் மாணவ-மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டு பறவைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலய சுற்றுச்சுவர்களில் பறவைகளின் ஓவியங்களை வரைந்தனர்.
நிகழ்ச்சிக்கு வன பாதுகாவலர் ஷானவாஸ்கான் முன்னிலை வகித்தார். இதில் மாணவ-மாணவிகள், வன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வனச்சரகர் சரவணகுமார், உயிரியியலாளர் கந்தசாமி, வனவர் புஷ்பராஜ், வனக்காப்பாளர்கள் மதியழகன், மணிகண்டன், அஜீத் தேவ ஆசீர் மற்றும் பலர் செய்திருந்தனர்.