சென்னையில் உலகத்தரத்தில் 'கலைஞர் கூட்டரங்கு' அமைக்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

கிழக்கு கடற்கரை சாலையில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் ‘கலைஞர் கூட்டரங்கு’ அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-08-12 17:14 GMT

சென்னை,

சென்னை பனையூரில் நடைபெற இருந்த 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேறொரு நாளில் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், "அரசாங்கத்தின் உதவியுடன் சென்னையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக உலகத்தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் பதிவை மேற்கோள் காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார். அதில், 'மாநாடு, கண்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தும் வகையில் விரைவில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் 'கலைஞர் கூட்டரங்கு' அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்